(சுகிர்தகுமார)
திருக்கோவில்-அக்கரைப்பற்று பிரதான வீதியில் சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று(21) உகந்தையிலிருந்து பாண்டிருப்பு நோக்கி வந்த கார் வேக கட்டுப்பாட்டை இழந்து அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம் பிரதான வீதிக்கு அருகாமையில் இருந்த கற்குவியலில் மோதியுள்ளது.
இதன் காரணமாக காரில் பயணித்த மூன்று சிறுவர்கள் உட்பட 6 பேர்; காயமடைந்துள்ளதுடன் தெய்வாதீனமாக எவ்வித உயிரிழப்புக்கனும் எற்படவில்லை.
காயமடைந்தவர்கள் மீட்டெடுக்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்றப் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தில் கார் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் விபத்து தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment