(வி.சுகிர்தகுமார்)
எவரும் எதையும் செய்துவிட்டு கட்சியில் தொடர்ந்திருக்கலாம் என நினைக்கக்கூடாது. கட்சிக்கு ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றவர் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் யாரும் இரகசிய வாக்கெடுப்பில் ஈடுபடவோ அல்லது இரகசிய வாக்கெடுப்பிற்கு கோர முடியாது. பகிரங்க வாக்கெடுப்பிற்கே வாக்களிக்க வேண்டும்.
தவிசாளர் பிரதி தவிசாளர்களை கட்சியே தீர்மானிக்கும். கட்சி முன்மொழிகின்றவர்களுக்கே உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் 06 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (21) சனிக்கிழமை அக்கரைப்பற்றில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் அக்கரைப்பற்றில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ. சுமந்திரன் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்; சிறப்பித்தார்.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கல்முனை தொகுதி அமைப்பாளர் அருள்.நிதான்சன் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் திருக்கோவில் தவிர்ந்த பொத்துவில் ஆலையடிவேம்பு காரைதீவு சம்மாந்துறை நாவிதன்வெளி ஆகிய 05சபைகளின் 24 உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment