சாய்ந்தமருது நகர சபை விடயத்தை தடுத்தவர் முன்னாள் எம்.பி ஹரீஸ்



  


பாறுக் ஷிஹான்


சாய்ந்தமருது நகர சபை விடயத்தில்  தடுத்தவர் முன்னாள் எம்.பி ஹரீஸூம் ஒருவர்.அதுமட்டுமல்ல ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் அனைத்து உறுப்பினர்களும் எதிராகவே செயற்பட்டனர்.என்னை தவிர அனைவரும் இவ்விடயத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர் என  ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. எஹியாகான்  தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் திங்கட்கிழை(9) இரவு  நடைபெற்ற விசேட  செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

அங்கு கருத்து தெரிவித்த அவர்


சாய்ந்தமருது நகர சபை விடயத்தில்  தடுத்தவர் முன்னாள் எம்.பி ஹரீஸூம் ஒருவர்.அதுமட்டுமல்ல ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் அனைத்து உறுப்பினர்களும் எதிராகவே செயற்பட்டனர்.என்னை தவிர அனைவரும் இவ்விடயத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.வெளியிடங்களில் பல்வேறு மாயைகளை காட்டிவிட்டு உள்ளக கலந்துரையாடல்கள் கூட்டங்களில் நகர சபையினை சாய்ந்தமருது மக்களிற்கு கொடுக்கக்கூடாது என்று கூறி வந்தார்கள்.அதாவது கொடுத்தால் பிரிந்துவிடும் கொடுக்க கூடாது அது போய்விடும் விற்கப்பட்டு விடும்.இவ்வாறு பல்வேறு கதைகளை கட்டிவிட்டார்கள்.

முன்னாள் எம்.பி ஹரீஸ் சாய்ந்தமருது நகர சபையினை பிரித்து கொடுத்தால் கல்முனை பறிபோய்விடும் என்று நினைத்தார்.அது பொய்யான விடயம்.இவருடன் இணைந்து பல உறுப்பினர்கள் இவ்விடயத்தில் எதிராகவே இருந்தார்கள்.இவ்விடயத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்ட பள்ளிவாசல் தலைவரது கையையும் தட்டிவிட்டு அவமானப்படுத்தினார்கள்.நான் கூட பல்வேறு சந்தர்ப்பங்களில் பள்ளிவாசல் தலைவரை அழைத்து சம்பந்தப்பட்ட அவர்களுடன் சந்திப்பினை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றேன்.

அவர்கள் அச்சபையினை கொடுத்திருக்கலாம்.ஆனால் இவர்கள் திட்டமிட்டு தடுத்தார்கள்.எனவே தான் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸை தவிர  எவரும் சாய்ந்தமருது நகர சபை விடயத்தை   தடுக்கவில்லை என்பதை தெளிவாக என்னால் கூற முடியும். என்றார்.