பிரித்தானியாவில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கறுப்பு ஜூலை 42 வருட நினைவு





வி.ரி.சகாதேவராஜா)


இலங்கையில் 1983 இல் இடம்பெற்ற  கறுப்பு ஜூலை கலவரத்தின் 42 வது வருடத்தை நினைவுகூர்ந்து  எதிர்ப்பு பேரணியொன்று  பிரித்தானியாவில் இன்று மாலை நடைபெற்றது.

1983 கறுப்பு ஜூலை 42வருட வலி சுமந்து ஈழத்தமிழர்களின் இன படுகொலைக்கு எதிராக தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC)  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE)மற்றும் சர்வதேச நீதிக்கான தமிழ் ஈழ மக்கள் சங்கம் (TEPAIJ) இணைந்து அம் மாபெரும்  பேரணியை நடாத்தியது.

பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் நடைபெற்ற இப் பேரணியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.