சாகாமம் உள்ளிட்ட வயல் பிரதேசங்களும் அதிக பனிமூட்டம் காரணமாக நுவரெலியா போன்று காட்சி




(சுகிர்தகுமார்) 0777113659     


 அம்பாரை மாவட்டத்தின் சாகாமம் உள்ளிட்ட வயல் பிரதேசங்களும் கிராமங்களும் அதிக பனிமூட்டம் காரணமாக நுவரெலியா பகுதிகள் போன்று இன்று (03)  காலை காட்சியளித்தது.
வீதிகளில் எதிரே வருகின்ற வாகனங்கள் கூட தெரியாதளவிற்கு பனிமூட்டம் காணப்படுவதுடன் ஒளியூட்டியே சாரதிகள் வாகனங்களை செலுத்த வேண்டியுள்ளனர்.
வயல் நிலங்கள் அறுவடைக்கு தயாராகிவரும் நிலையில் அதிக பனிமூட்டம் காரணமாக நெற்கதிர்களில் நோய்தாக்கங்கள் ஏற்படலாம் என விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
காலநிலை மாற்றம் காரணமாக இந்நிலை உருவாகியுள்ளதுடன் இதனால் சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கும் சிறிய நோய்தாக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.