அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) வரலாற்றில் வரலாற்று சாதனை....



 


எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய தேசிய பாடசாலை வரலாற்றில் அனைத்து பாடங்களையும் ஆங்கில மொழியில் தோற்றி அனைத்து பாடங்களிலும் A சித்தி பெற்ற மாணவன் M Aakif Ahamed அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். 


Bilingual பிரிவில் கல்வி கற்று 9 பாடங்களையும் ஆங்கில மொழியில் எழுதி இருந்தார். 


Bilingual பிரிவில் உள்ள மாணவர்கள் வழமையில் 6 பாடங்களில் ஆங்கில மொழியிலும் 3 பாடங்களை தமிழ் மொழியிலும் எழுதுவது வழக்கம். 


ஆனாலும் M Aakif Ahamed என்ற மாணவன் இம்முறை வெளியாகிய சாதாரண பரீட்சையில் தமிழ் பாடம் தவிர்ந்த Science,Maths, History,Islam, English,PED, Geography, English Literature ஆகிய பாடங்களை ஆங்கில மொழியில் எழுதி 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளமை பாடசாலை வரலாற்றில் முதல் தடவை ஆகும். 


இம் மாணவர் அக்கரைப்பற்றை சேர்ந்த DR.AM. மஃபூப் அவர்களின் மகனாவார். இம்மாணவனை பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.


அத்துடன் இன்னும் இரண்டு மாணவர்கள் Bilingual பிரிவில் அனைத்து பாடங்களிலும் A சித்தி பெற்றிருப்பதுடன் 


இன்னும் மூன்று மாணவர்கள் 8A 1B இனையும் பெற்றுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.