பாறுக் ஷிஹான்)
"கிளீன் ஸ்ரீ லங்கா" (Clean Sri Lanka) வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக பாரிய சிரமதானத்தை கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சிரமதான முன்னெடுப்பானது அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்குட்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ் பெரிய நீலாவணை பொலிஸ் சவளக்கடை மத்திய முகாம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஆரம்பமானது
கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட் தலைமையில் குறித்த சிரமதான முன்னெடுப்பானது சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது மேற்கூறப்பட்ட பொலிஸ் நிலையங்களின் சுற்றுச் சூழல் பிரிவு, சமூகப் பொலிஸ் பிரிவு ,சிறுவர் பெண்கள் விசாரணப் பிரிவு, என்பன பங்கேற்றன.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடனும் டெங்கு நோயின் தாக்கத்தை இப்பிரதேசத்தில் கட்டுப்படுத்தும் முகமாகவும் அப்பகுதிகளில் உள்ள குப்பைகூழங்கள் காடுமண்டிய இடங்கள் யாவும் துப்பரவு செய்யப்பட்டன.இதன்போது வீதியோரங்களில் தேங்கிக் காணப்பட்ட கழிவுகளை பொலிஸார் அகற்றி சுத்தப்படுத்தி சூழலை அழகுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment