காரைதீவு கோலாகலம்



s


( வி.ரி. சகாதேவராஜா)

இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் 23 வயதிற்குட்பட்ட வீரர்களை உள்ளடக்கிய vaaj junior premier league 2025 கூடைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்று தேசிய சாம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட அம்பாரை மாவட்ட அணியினரைக்( காரைதீவு ) கௌரவிக்கும்  பெருநிகழ்வு நேற்று  ஞாயிற்றுக்கிழமை (20.07.2025) காரைதீவில் கோலாகலமாக நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட கூடைப்பந்தாட்ட அணியாக காரைதீவு கூடைப்பந்தாட்ட கழக அணியினர் பிரதிநிதித்துவப் படுத்தியிருந்தமை தெரிந்ததே.

முன்னதாக, காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் சாதனை வீரர்களை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னர், திறந்த வாகனத்தில் சாதனை வீரர்களை ஏற்றி மாலை சூட்டி காரைதீவு பூராக ஊர்வலம் இடம் பெற்றது.

ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட சாதனை வீரர்களை கௌரவிக்கும் பிரதான நிகழ்வு,
காரைதீவு விளையாட்டுக்கழக மண்டபத்தில் ASCO இன் ஏற்பாட்டில் இடம்பெற்றது .

ஏற்பாட்டாளர் விளையாட்டு உத்தியோகத்தர் பி.வசந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
அதிதிகளாக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன்,ASCO அமைப்பின் செயலாளர் எஸ்.நந்தகுமார், பொருளாளர் ம. சுந்தர ராஜன்,சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி. சகாதேவராஜா,நில அளவையாளர் வி. இராஜேந்திரன்,விளையாட்டு உத்தியாகத்தர்களான பி.வசந்த் ,வி.பாஸ்கரன், இளைஞர் சேவை உத்தியோகத்தர் ச.ராதிந் ,காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எல்.சுரேஷ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் வாழ்த்து உரைகள், சாதனை விளையாட்டு வீரர்கள் முகாமையாளர், பயிற்றுனர்கள் கௌரவிப்பு என்பன இடம்பெற்றன.




 கடந்து வந்த பாதை!

இலங்கையின் 15 மாவட்டங்களின் பங்குபற்றுதலுடன் மாத்தறையில் கடந்த 9,10,11,12 திகதிகளில் இச் சுற்றுப் போட்டி இடம்பெற்றது.

இச் சுற்றுப்போட்டி தொடரில் அம்பாறை மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் காரைதீவு  அணியானது குழு A யில் இடம்பிடித்து முதலாவது போட்டியில் வவுனியா மாவட்ட அணியினருடன் மோதி 19:74 எனும் புள்ளி அடிப்படையில் வெற்றியீட்டி 2 வது போட்டியில் மாத்தளை மாவட்ட அணியுடன் மோதி 71:25 எனும் புள்ளியினை பெற்று மாத்தளை மாவட்ட அணியினை 46 புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி அம்பாறை மாவட்ட அணி கால் அரையிறுதி போட்டிக்கு தெரிவானது.

கால் அரையிறுதி போட்டியில் நுவரெலியா மாவட்டத்தினை அம்பாறை மாவட்ட அணி எதிர்கொண்டு 59:40 எனும் புள்ளி அடிப்படையிலும்  அரையிறுதி போட்டியில் மாத்தற மாவட்டத்தினை அம்பாறை மாவட்ட அணி எதிர்கொண்டு 58:46 எனும் புள்ளி அடிப்படையில் வெற்றியீட்டி இறுதி  போட்டிக்கு முன்னேறியது.

இச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியானது  வியாழக்கிழமை 12.06.2025 மாலை  4.00 மணிக்கு மாத்தறை Lebeema உள்ளக அரங்கில் இடம்பெற்றது.

இறுதிப்போட்டியில் அம்பாறை மாவட்ட அணியானது பதுளை மாவட்ட அணியை 53:50 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிகொண்டு சம்பியனானது. 

வரலாற்றில் முதல் தடவையாக காரைதீவு கூடைப்பந்தாட்ட அணி தேசிய ரீதியில் சாம்பியனாக வெற்றி வாகை சூடியுள்ளமையையிட்டு பல தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்த