வி.சுகிர்தகுமார் 0777113659
ஜனாதிபதியின் கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்திற்கமைய கிழக்கு மாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கமைவாக திருக்கோவில் பிரதேச சபையின் ஏற்பாட்டில் கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம் இன்று (09) முன்னெடுக்கப்பட்டது.
திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தில் உப தவிசாளர் மற்றும் அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் பிரதேச சபை ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தம்பட்டை பெரிய முகத்துவாரம் கடற்கரை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப்பணியில் நாளாந்தம் பொதுமக்களால் போடப்படும் கழிவுகள் அகற்றப்பட்டன.
அத்தோடு கழிவுகள் வகைப்படுத்தி பிரதேச சபை கழிவகற்றல் வாகனங்களின் ஊடாக அகற்றப்பட்டது.
ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய தவிசாளர் அரசாங்கத்தின் கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்திற்கு அனைத்து திணைக்களங்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் இதன் அடிப்படையில் அழைப்பு விடுத்து வருகை தந்த அனைத்து திணைக்கள அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

Post a Comment
Post a Comment