CLEAN SRILANKA"



 


"CLEAN SRILANKA" வேலைத்திட்டம்  அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் கடற்கரை பகுதி ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில் சிரமதானம்....

 

செழிப்பான தேசம் அழகான வாழ்கை எனும் "CLEAN SRILANKA" வேலைத் திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட  சின்ன முகத்துவாரம் கடற்கரை பகுதியை சுத்தப்படுத்தும் சிரமதானம் இன்றைய தினம் (09) காலை 7.30 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் ஆ.தர்மதாச தலைமையில் இடம்பெற்றது. 



சிரமதானத்தின் போது கடற்கரைப்பகுதியில்  காணப்பட்ட கழிவுப்பொருட்கள் சேகரிக்கப்பட்டு அதனுடன் தொடர்புடைய முறையான அகற்றும் நடவடிக்கை மூலம் ஆலையடிவேம்பு பிரதேசசபையினரால் மேற்கொள்ளப்பட்டது.இந்நிகழ்வானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில்  மக்கள் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும் .

குறித்த சிரமதானத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் பிரதி தவிசாளர் க.ரகுபதி,  பிரதேச சபை உறுப்பினர்கள், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செயலாளர் ரா.சுரேஷ்ராம், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.