சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது



 



பாறுக் ஷிஹான்


சட்டவிரோத சிகரெட்டுக்களை உடமையில் வைத்திருந்த  குற்றச்சாட்டில்  இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  சட்டவிரோதமாக சிகரெட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக இன்று நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
ஏ .டபிள்யூ. எஸ். நிசாந்த வெதகேக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது  07 லட்சத்து 45 ஆயிரம் ரூபா பெறுமதியான 4601 சட்டவிரோதமாக  சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைதாகினர்.

நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில்  பொலிஸ் சாஜன்  36937 பண்டாரஇ பொலிஸ் கொஸ்தாபல்  29752 இஸுறு பொலிஸ் குழு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில்  இரண்டு சந்தேக நபர்களுடன் பெருந்தொகையான இந்த சட்ட விரோத சிகரெட்டுக்களுடன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிசார்  முன்னெடுத்துள்ளதுடன்   சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் கைதான இரண்டு  சந்தேக நபர்களையும்  சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

--