தேசிய விளையாட்டு வார நிகழ்வுகள் மட்டக்களப்பிலும் அனுஷ்டிப்பு






✍️ ஆதிப் அஹமட்


 🔵 தேசிய விளையாட்டு வார நிகழ்வுகள் மட்டக்களப்பிலும் அனுஷ்டிப்பு



இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில்  இம் மாதம் 26 ஆம் தேதி தொடக்கம் 31ஆம் திகதி வரை தேசிய விளையாட்டு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.


துடிப்பான மக்கள் வெற்றி பெற்ற தேசம் எனும் அரசின் விளையாட்டுக் கொள்கைக்கிணங்க

 நாட்டு மக்களிடத்தில் விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துவதுடன் தொற்றா நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் செயற்பாடுகளை மேம்படுத்துவது இந்த செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.


இதன் அங்கமாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி JJ .முரளிதரன் அவர்களின் வழிகாட்டலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திருமதி N.முகுந்தன்  அவர்களின் ஏற்பாட்டில் ஏரோபிக் தேகப்பயிற்சி நிகழ்வு கடந்த 28 மற்றும் 29-ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர் கூடம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகிய கற்கை நிறுவகம்  என்பவற்றில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் MY .ஆதம்  அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் ஏரோபிக் பயிற்சிகளை உடற்கல்வி ஆசிரியை திருமதி கஜேந்தினி திஷாந்த் அவர்கள் வழங்கி பயிற்சியளித்தார்.


இந்நிகழ்வுகளில்  பெருந்தொகையானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் இதன்  தேசிய மட்ட நிகழ்வானது இன்று 31.07  2025 ஆம் திகதி கொழும்பில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.