இஸ்ரேலின் உளவாளிகள் 20 பேர், கைது



 


சமீபத்திய மாதங்களில் இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பின் செயற்பாட்டாளர்கள் என்று கூறப்படும் 20 பேரை ஈரான் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


ஈரான் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றொரு அணு விஞ்ஞானி பற்றிய தகவல்களை இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகவும், தகவல்களை வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டதனடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் நீதித்துறை செய்தித் தொடர்பாளர் அஸ்கர் ஜஹாங்கிரி கூறுகையில்,


கைது செய்யப்பட்ட 20 சந்தேக நபர்களில் சிலருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


“சியோனிச ஆட்சியின் உளவாளிகள் மற்றும் முகவர்கள் மீது நீதித்துறை எந்த கருணையும் காட்டாது, மேலும் உறுதியான தீர்ப்புகளுடன், அவர்கள் அனைவரையும் ஒரு முன்மாதிரியாக மாற்றும்” என்று ஜஹாங்கிரி தெரிவித்துள்ளார்.


இதேவேளை விசாரணைகள் முடிந்ததும் முழு விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.