இலங்கை வானொலியின் மூத்த செய்தியாளர், அக்கரைப்பற்று அபுல் ஹசன் அவர்கள் மறைவு





அக்கரைப்பற்று  5 ஐ பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்படமாகவும் கொண்ட முஹம்மது அபூபக்கர் அபுல் ஹசன் ஹாஜி கொழும்பில் இன்று காலமானார். இவர் பன்நெடுங்காலமாக இலங்கை வானொலி ஆங்கில செய்திப் பிரிவில் சிரேஸ்ட செய்தியாளராகப் பணிபுரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபுல் ஹசன் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை செய்தியாளராக சுமார் முப்பது ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்னர் சுயாதீன பத்திரிகை சமாஜத்தின் Sun, Weekend ஆகிய  பத்திரிகைகளிலும் கடமை புரிந்தார்.

ஏ சீ எஸ் ஹமீத் வெளி விவகார அமைச்சராக இருந்த போது அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றினார்.  ஊடகப்பணிக்காக பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். தற்போது 

தெமட்டகொடை, ஞானவிமல வீதியில் வைக்கப்பட்டுள்ள அவரது ஜனாஸா இன்றிரவு  இசாத் தொழுகையின் பின்னர் தெஹிவளை ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அபுல் ஹசனின் மறுமை வாழ்விற்காக அனைவரும் பிரார்த்திப்போம்.