35 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு




 எம்.ஏ. தாஜஹான்.

 ஜனாதிபதி விருது பெற்ற விவசாயி அல்-ஹாஜ்  கே.பி எம். ஷரிப் மற்றும் சபுரா உம்மா தம்பதிகளின்   தவப்புதல்வன் #முஹம்மதுஷரிப்   #அப்துல்வாஸித் அவர்கள் 1971.09.10 அன்று பொத்துவில் பதியில் பிறந்தார். 


பொத்துவில் மத்திய கல்லூரி, கல்முனை ஷாஹிரா கல்லூரியின் பழைய மாணவராக காணப்படும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் #எம்எஸ்அப்துல்வாசித் அவர்கள்  35 வருடங்களாக சிறந்த முறையில்  முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக செயலாற்றி அண்மையில் ஓய்வு பெற்றுள்ளார்.


 தனது இளம் வயதில் (19 வயது) இலங்கையில் நடாத்தப்பட்ட முகாமைத்துவ உதவியாளர் போட்டிப்  பரீட்சையில் சித்தியடைந்து  பொத்துவில் பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக நியமனத்தைப் பெற்றுக் கொண்ட இவர், ஓய்வு பெற வேண்டிய காலம் 2031.09.10 ஆக இருப்பினும் பாராளுமன்ற உறுப்புரிமைக்காக வேண்டியும், ஊர் நலனுக்காக வேண்டியும் முன் கூட்டி ஓய்வு பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 41 வருடங்கள் அரச சேவையில் சேவையாற்றக் கூடிய தகுதி நிலை இவருக்கு உரித்தானது என்பது குறிப்பிடத்தக்கது. 


தனது இளம் பருவம் முதல் சமூக சேவையில் தன்னை முழுமைப் படுத்திக் கொண்டு விளையாட்டு, அரசியல், சமூக செயற்பாடுகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர். 


10 வருடங்கள் பொத்துவில் விளையாட்டுக் கழக சம்மேளன தலைவராகவும், 05 வருடம் மாவட்ட சம்மேளன தலைவராகவும் இருந்து விளையாட்டுத் துறைக்கும், கழகங்களைக்  கொண்டு கல்வித்துறைக்கும் பெரும் பங்காற்றியமை விதந்து கூறப்பட வேண்டும். 


காலஞ் சென்ற மர்ஹும் எம்பி. அஸீஸ் (பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களின் அரசியல் பாசறையில் இளைஞராக அடையாளப்படுத்தப்பட்ட அப்துல் வாசித் அவர்கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காகவும்,  பொத்துவில் பிரதேசத்தில் SLMC கட்சி  வளர்ச்சிக்காகவும்  அன்று தொட்டு இன்று வரை பங்களிப்பு செய்து வருகின்றார். 


அப்துல் வாசித் அவர்கள் பொத்துவில் பிரதேச சபைக்கு சுயேட்சைக் குழு மூலம் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட திலிருந்து SLMC கட்சியில் இரண்டு முறை தவிசாளராக பதவி வகித்து தன்னால் முடிந்த அளவு பொத்துவில் பிரதேச கல்வி, சுகாதாரம், விளையாட்டு, வாழ்வாதாரம் அத்தனைகளையும் அபிவிருத்திப் பாதைக்கு வித்திட்டு செயற்படுத்திக் காட்டியுள்ளார். 


பொத்துவில் பிரதேச செயலகத்தில் யாரைக் கண்டாலும் முகமன் கூறி வரவேற்று தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பார். சில சந்தர்ப்பங்களில் பிறப்புச் சான்றிதழ் அல்லது இதர வேலைக்காக செல்பவர்களின்  வேலையினை முடித்து சேவை நாடியின் காலடி சென்று பதிவுகளை வழங்கி வந்துள்ளார். (இது பலரது கருத்து )


ஓய்வு பெற்றுச் செல்லும் போது MSO - Class - 01 உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தத்தது. நிர்வாக உத்தியோகத்தராக வர வேண்டிய பொழுதும் அதனை விடுத்து அரசியல் ஊடாக இந்த ஊரின் நலனுக்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எடுத்துக் கொண்டு, பொத்துவிலின் குரலாக பாராளுமன்றத்தில் பல தீர்க்கப்படாத பிரச்சினைகளை பேசி வருகின்றார். 


எனவே, சிறந்த நிர்வாகத் திறன் கொண்டு சமூக அக்கறையுடன் செயற்பட்டு வரும்  பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித்  அவர்களுக்கு ஒரு வருட தேசியப் பட்டியலை SLMC வழங்கியுள்ளது. 


தனது உயர் பதவிகளை  துறந்து (ஓய்வு பெற்று) பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுள்ள அப்துல் வாசித் அவர்களுக்கு பொத்துவில் நலனை அடிப்படையாகக் கொண்டு SLMC கட்சி  தொடர்ந்தும்  ஒரு வருடம் என்று மட்டுப் படுத்தாமல் முழுமையான பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். 


எம்.ஏ. தாஜஹான்.