விபுலானந்தாவின் மாபெரும் பவளவிழா நடைபவனி!






 (வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பவளவிழா நடைபவனி நாளை ( 16 ) சனிக்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
 பழைய மாணவர்

கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கின்ற  இம் மாபெரும் பவளவிழா நடைபவனியில் 51 வருட மாணவர் அணியினர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் சகிதம் தனித்துவமான சீருடையுடன் கலந்து கொள்ளவுள்ளனர்.

சங்கத்தின் தலைவரும் ,கல்லூரி அதிபருமான ம.சுந்தரராஜன் தலைமையில் நடைபெறும் இம் மாபெரும் பவளவிழா நடைபவனி தொடர்பாக பழைய மாணவர் சங்கத்தின் ஆலோசகரும், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா விளக்கமளித்தார்.

"விபுலத்தால் ஒன்றிணைந்துயர்வோம்"  என்ற மகுடத்தின் கீழ் நடைபெறும் இந் நடைபவனிக்கு ,
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளரும் பழைய மாணவருமான எஸ்.
புவனேந்திரன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

அங்குரார்ப்பண நிகழ்வில் கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் கலந்து கொள்வார்.
நட்சத்திர அதிதிகளாக கல்லூரியில் பயின்று இன்று உயர்நிலையில் இருக்கின்ற பேராளர்கள் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர் .

நாளை காலை 7.30 க்கு விபுலானந்தா மத்திய கல்லூரியின் மைதானத்தில் இருந்து ஆரம்பமாகும் நடைபவனி காரைதீவிற்குள் மட்டுப்படுத்தப்பட்டு பிற்பகல் ஒரு மணியளவில் நிறைவடையும்.