புலமை பரிசில் பரீட்சை எழுத ஆர்வத்துடன் கலந்த மாணவர்கள்



 


(வி.சுகிர்தகுமார்)

 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை இன்று (10) காலை நாடளாவிய ரீதியில் ஆரம்பமான நிலையில் அம்பாரை மாவட்டத்திலும் பல்வேறு பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

; திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீP இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையத்திற்கு செல்வதற்காக இன்று காலை  ஆர்வத்துடன் பெற்றோர்களுடன் மாணவர்கள் காத்திருந்ததை காண முடிந்தது.

 இதேநேரம் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை ஒழுங்குபடுத்தி பரீட்சை நிலையத்திற்கு அனுப்புவதற்கான பணியை பாடசாலையின் அதிபர் தலைமையிலான ஆசிரியர்கள் மேற்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இறைவழிபாட்டில் ஈடுபட்ட மாணவர்கள் குருமார்கள் பெற்றோர் ஆசிரியர்களை வணங்கி பரீட்சை நிலையத்தினுள் நுழைந்ததையும் இங்கு அவதானிக்க முடிந்தது.

; இம்முறை பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் காணப்பட்டதையும் பெற்றோர்கள் மிகுந்த அக்கறையுடன் மாணவர்களின் நலன்களில் அக்கறை செலுத்தியதையும் இன்று காண முடிந்தது.