அக்கரைப்பற்று 2 கூட்டுறவு சங்க வீதியில் வசித்துவரும் அப்துல் கபூர் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) காலமானார்.
அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயம் ஆயிஷா மகளிர் கல்லூரி ஆகியவற்றில் பன்னெடுங்காலமாக தமிழ் மொழி ஆசிரியராக பணி புரிந்திருந்தவர் இவர், வயது மூப்பின் காரணமாக தனது 87 வது. வயதில் காலமானார்.
அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்தைச் செதுக்கியவர்களுள் கபூர் மாஸ்டரும் ஒருவர் எனலாம்.
கலை இலக்கிய நயம் மிகுந்த இவர் பல மாணவர்களை , பயிற்றுவித்து தேசிய மட்டப் போட்டிகளிலும் வெற்றி பெறுவதற்காக பணிபுரிந்து இருந்தார்.
அக்கரைப்பற்று கலாசார பேரவை மற்றும் ப பிரதேச செயலகம் ஆகியவை இவரது கலை இலக்கியப் பணிக்காக விருது வழங்கி கௌரவித்திருந்தது.
இவர்,சனூபா,அறூஸா,சதீம் (WB) ஆகியோரின் அன்பு தந்தையும்
அப்துல் கரீம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்),
ஜமால்தீன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்)
ஆகியோரின் அருமைச்
சகோதரரும்
மன்சூர் (PTM)
ஜெலீலுர்ரஃமான் (ஆசிரியர்)
நௌபல் - சஊதி அரேபியா, ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்கள்
நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் ஞாயிறு காலை நல்லடக்கம் செய்யப்படும்.


Post a Comment
Post a Comment