இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி பிரதமர் கொல்லப்பட்டதாக தகவல்





 இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி பிரதமர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


“ஏமனில் உள்ள சனா பகுதியில் ஹவுதி ஆட்சியின் இராணுவ இலக்கை துல்லியமாகத் தாக்கியதாக” இஸ்ரேலிய இராணுவம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.


இந்த தாக்குதலில் ஹவுதி பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி மற்றும் பல அமைச்சர்கள் கொல்லப்பட்டதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது.


ஏமன் தலைநகர் சனாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்தின் பிரதமர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய ஆதரவு ஹவுதிகள் இன்று (30) தெரிவித்துள்ளனர்.


இந்த தாக்குதலில் பிரதமர் அகமது அல்-ரஹாவி மற்றும் பல அமைச்சர்கள் கொல்லப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.