தொழில் சார் மற்றும் வாழ்க்கைத் திறன் பயிற்சிநெறி சான்றிதழ்கள்





 ( வி.ரி.சகாதேவராஜா)

விவேகானந்த தொழில்நுட்வியல் கல்லூரியின் புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கிளைகளில் பயிற்சி பெற்ற பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (01.08.2025) கிழக்கு பல்கலைக்கழகத்தின்  அழகியல் கற்கைகள் நிறுவன மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ்வரன்  தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு NVQ தர சான்றிதல்கள் (தேசிய தொழில் சார் தகைமைத் தகுதிச் சான்றிதழ்), வாழ்க்கைத் திறன் பயிற்சி நெறிக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆங்கில மற்றும் சிங்களப் பாடநெறிக்கான சான்றிதழ்கள் என வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன்
பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மகாராஜ், பிரதம அதிதியாக அரசாங்க அதிபரின் பிரதிநிதியாக உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் , சிறப்பு அதிதியாக இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர்
பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கெனெடி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கௌரவ அதிதிகளாக தகவல் தொழில்நுட்ப நிபுணர் (இங்கிலாந்து) பாலா இமயவன், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் அதிபர் த.சந்திரசேகரம்,
சமூக நலன்புரி அமைப்பின் தலைவர்
தயனி கிருஸ்ணாகரன் ஆகியோர் கலந்துகொண்டு பயிலுனர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

இதன்போது 342 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர். இவ்வாறு வருடாந்தம் அண்ணளவாக 850 மேற்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சியினை வழங்குவதுடன் அவர்களின் தொழில்பாதையினை தெளிவூட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது