5 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜ்.. ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பியது எப்படி?



 


ஐந்தாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 35 ரன்களும் இந்திய அணி வெற்றி பெற 4 விக்கெட்டுகளும் தேவைப்பட்டன. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலே ஜேமி ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தினார் சிராஜ்.

அதனைத் தொடர்ந்து பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஜேமி ஓவர்டன் எல்பிடபிள்யூ ஆனார். 12 பந்துகளைச் சந்தித்த ஜோஷ் டங் 0 ரன்களில் பிரசித் கிருஷ்ணா வீசிய ஃபுல் லெந்த் பந்தில் க்ளீன் போல்ட் ஆனார். இதனைத் தொடர்ந்து கையில் காயம் ஏற்பட்ட நிலையில் கிறிஸ் வோக்ஸ் பேட்டிங் செய்ய வந்தார்.

ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்த நிலையில் மறுபுறம் கஸ் அட்கின்சன் நிலைத்து நின்று ஆடினார். இங்கிலாந்தின் வெற்றிக்கு 17 ரன்களும் இந்தியாவின் வெற்றிக்கு 1 விக்கெட்டும் தேவை என்கிற நிலையில் ஆட்டம் இருந்தது. சிராஜின் பந்து வீச்சில் சிக்ஸர் பறக்கவிட்டு ஆட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தார் அட்கின்சன் . அவர் அடித்த பந்து ஆகாஷ்தீபின் கடினமாக கேட்ச் முயற்சியையும் கடந்து எல்லைக் கோட்டிற்கு வெளியே சென்று விழுந்தது.

கிறிஸ் வோக்ஸை ஸ்ட்ரைகர் எண்டிற்கு வரவைக்கக்கூடாது என்பதில் அட்கின்சன் குறியாக இருந்தார். பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிப்பது மட்டுமே அவருடைய இலக்காக இருந்தது. இரண்டு ஓவர்களில் கடைசி பந்துகளில் 1 ரன்கள் எடுத்து ஸ்ட்ரைகர் எண்டிற்கு வந்தார்.