தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று (05) நடைபெறவுள்ளது.
அதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றம் கூடும்.
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர்பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (05) பிற்பகல் நடைபெற உள்ளது.
தவறான நடத்தையை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, 115 பாராளுமன்ற ஊறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தென்னகோன் குற்றவாளி என்று ஒருமனதாக முடிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment