கல்முனை பிராந்திய பணிமனைக்கு வாசித் எம்.பி விஜயம்



 


பாறுக் ஷிஹான்


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு திங்கட்கிழமை (25) விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனை  சந்தித்து கலந்துரையாடினார்.

உல்லை மற்றும் கோமாரி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு (PMCU) ஆகியவற்றின் தற்போதைய தேவைகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் பணிப்பாளருடன் இதன்போது கலந்துரையாடியதுடன் அத்தியாவசியத் தேவைகளை நிவர்த்தி செய்து தருமாறும் கேட்டுக்கொண்டார்.

வைத்தியசாலைகளின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி வருவதாக தெரிவித்த பணிப்பாளர் அவர்கள் குறித்த ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவுகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.