நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் காணப்படும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் விசேட தரம் - சுப்ரா ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆளணி அங்கீகாரம் முகாமைத்து சேவை திணைக்களத்திடம் இருந்து கிடைக்கப் பெற்றதும் விரைவில் விண்ணப்பங்கள் கோரப்பட உள்ளதாக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் லியாகத் அலி தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஜே.எம்.லியாகத் அலியுடன் தொடர்பு கொண்டு வலியுறுத்திய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேரடி கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அவர் இதனை தெரிவித்தார்
அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் உதவிச் செயலாளர் ஏ புஹாது கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் செயலாளருடன் இன்று 2025.08.26 நேரடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது குறித்து விளக்கியதுடன், குறித்த பரிட்சையை விரைவாக நடத்துவதற்கு ஆவண செய்யுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சுப்ரா தர ஆளணி வெற்றிடங்கள் நிலவி வருகின்றன .
இருந்த போதும் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள அரச திணைக்களங்களில் காணப்படும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சுப்ரா தர பதவி அணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக மட்டுப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளன .
இந்த நிலையில் மாகாண அரச நிர்வாகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்ப ஆவண செய்யுமாறு கோரி இருந்தார்.
அத்துடன் எமது தொழிற்சங்கம் மாகாண அரசு நிர்வாகத்தில் காணப்படுகின்ற முகாமை தூ சேவை உத்தியோகத்தர் சுப்ரார்த்தர ஆலணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான ரகுவிற்கு தேவையான அனுமதியை முகாமைத்துவ சேவைத்தினை களத்திடமிருந்து பெற்றுக் கொடுப்பதற்கு கொடுக்கும் நடவடிக்கை துரிதப்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை நாளை முன்னெடுக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்


Post a Comment
Post a Comment