பொத்துவில் கல்வி வலய விவகாரம் : உதுமாலெப்பை எம்.பியின் அறிக்கையை மறுக்கிறார் ஆதம்பாவா எம்.பி !



 


பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் தவிசாளருமான முஸாரப் கோரிக்கை விடுத்தார்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கருத்து தெரிவிக்கையில்,
பொத்துவில் - உகன பிரதேச மக்களினது நீண்ட கால நியாயமான கோரிக்கையினை நிறைவேற்றும் தூய எண்ணத்துடன் தன்னால் இம் முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் நாங்கள் ஒரு போதும் இனவாத ரீதியான செயற்பாடுகளை முன்வைக்கவோ, அங்கீகரிக்கவோ மாட்டோம் எனவும் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு எதிராக இம்முன்மொழிவுகள் முன்வைக்கப்படவில்லை என்பதனை பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் - உகன ஆகிய இரண்டு கல்வி வலயங்களே புதிதாக உருவாக்க வேண்டியுள்ளன. புதிய கல்வி சீர்திருத்தத்தின்படி எவ்வாறு கல்வி வலயங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதனை மத்திய கல்வி அமைச்சுதான் தீர்மானம் மேற்கொள்ளும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனரீதியான கருத்துக்களை துறை சார்ந்த அதிகாரிகள் வீற்றிருக்கும் இச்சபையில் முன்வைக்காமல் கௌரவமான முறையில் தங்களது கருத்துக்களை மொழிய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.
பொத்துவில் கல்வி வலயம் தொடர்பாக நீண்ட நேரமாக நடைபெற்ற சூடான விவாதத்தின் பின்னர் பிரதி அமைச்சர் வசந்த பீரிஸ் கருத்து தெரிவிக்கையில்,
பொத்துவில் - உகன கல்வி வலயங்கள் அமைப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவானது நியாயமானதாக உள்ளதாகவும் இப்புதிய கல்வி வலயங்களை உருவாக்குவது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தலைமையில் விசேட கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகளும் ஒன்றிணைந்து ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும் எனவும் தெரிவித்தார். என்று குறிப்பிடப்பட்டிருந்தது இங்கு கவனிக்கப்பட வேண்டியுள்ளது.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR 
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564