யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் பரந்தன் சந்திக்கு அருகில் இன்று (29) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, ஒரு டிப்பர் லொரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பேருந்து வீதியின் அருகே நிறுத்தப்பட்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு டிப்பர் முதலில் பேருந்தின் மீது மோதியது. பிறகு டிப்பர் லொரியின் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் லொரியுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றவர் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment