செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று (14) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
வழக்கு விசாரணையின்போது கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் நடவடிக்கையின் அறிக்கைகள், மண்பரிசோதனை அறிக்கை போன்ற அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் 7 ஆம் திகதியுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி அடுத்தகட்ட நடவடிக்கை நடைபெறும்.
இந்நிலையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின்போது 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றிலும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதோடு இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
.webp)

Post a Comment
Post a Comment