இலங்கையின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வரும் சட்டவிரோத சபாத் இல்லங்களை பொத்துவில் பிரதேச சபை மூடிவிட முன்வர வேண்டும்




நூருல் ஹுதா உமர், AsrafKhan

சிவில் அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் விரல் நீட்டிக்கொண்டிருக்கும் இஸ்ரேலிய ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய கடமை அரசியல்வாதிகளுக்கும், ஆன்மீக தலைமைகளுக்கும் எம் எல்லோருக்கும் இருக்கிறது. முஸ்லிம் காங்கிரசை எதிர்த்து பேசி அன்னாசியில் தேர்தல் கேட்டு மக்களை மட்டையர்களாக்கி மு.காவுடன் இணைந்து பொத்துவிலை ஆளும், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள் இலங்கையின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வரும் சட்டவிரோத சபாத் இல்லங்களை மூடிவிட வேண்டும். பின்னர் அதனை யாரை கொண்டு திறக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கலாம். சட்டவிரோத நிலையங்களை மூடும் அதிகாரம் பிரதேச சபை தவிசாளருக்கு இருக்கிறது என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஊடக சந்திப்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

கல்முனையில் இன்று (09) நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால், செயலாளர் நாயகமும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோர் கருத்துக்களை முன்வைத்தனர். இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்கள்,

 இல்ல)த்தினால் அருகில் இருக்கும் பள்ளிவாசலும் இருள் சூழ்ந்து  இஸ்ரேலிய வழிபாட்டு தளத்தின் வாகன தரிப்பிடம் போன்று மாறியுள்ளது. கிழக்கில் அரசியல் செய்யும் மூன்று காங்கிரஸ் தலைவர்களும் இந்த விடயங்களில் கவனம் செலுத்தி அந்த பள்ளிவாசலை எதிர்காலத்தில் குறைந்தது மூடிவிடுவதிலிருந்தாவது பாதுகாக்க வேண்டும்.


தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் வாயால் கதைத்தவற்றை தவிர சமூகத்தின் நலனுக்காக இந்த காங்கிரஸ்காரர்கள் எதுவும் செய்யவில்லை. கடந்த காலங்களில் வாயால் பேசிக்கொண்டிருந்ததையே இப்போதும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். வடக்கை தமிழ் முதலமைச்சர் ஆளவேண்டும் என்ற எங்களின் கொள்கைப்படி கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம். அதற்காக எதிர்வரும் காலங்களில் சகல காங்கிரஸ்காரர்களையும், பெருந்தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டணியை அமைக்கும் பணியை முன்னெடுத்து வருகிறோம்.