எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெல்லவாய பிரதான வீதி கரந்த கொல்ல ஒன்பது கட்டைப் பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்து மேலதிக சிகிச்சைக்கென மொனராகலை தள வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முந்தினம் (30) இரவு முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்திலேயே குறித்த விபத்து சம்பவதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் உயிரிழந்தவர் இரத்னபுரியைச் சேர்ந்த நாற்பத்திரண்டு வயதுடையவர் எனவும் வெல்லவாய கரந்த கொல்ல பகுதியில் இடம் பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் முச்சக்கர வண்டியில் இரவு நேரம் திரும்பிக் கொண்டிருக்கையிலேயே ஒன்பது கட்டைப் பகுதியிலுள்ள வளைவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவித்தனர்.

Post a Comment
Post a Comment