கண்டு பிடிக்க உதவிடுங்கள்





(PottuvilSiyaath)

 நான்கு பிள்ளைகளின் தாயை 15 நாட்களாக காணவில்லை. 


பொத்துவிலை சேர்ந்த சம்சுதீன் சனா எனும் 31 வயதுடைய 4 பிள்ளைகளின் தாயை 15 நாட்களாக காணவில்லை.


கடந்த 15.08.2025 ம் திகதி இவரின் கணவர் தொழில் நிமித்தம் வெளியூர் சென்றிருந்த போது பிள்ளைகளின் பாடசாலை விடுமுறையை காரணம் சொல்லி தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்த இவரே அடுத்த நாள் 16.08.2025ம் திகதி  காணாமல் போயுள்ளார் அன்றில் இருந்து 15 நாட்களாகியும் இது வரை தேடியும் கிடைக்கவில்லை.  பிள்ளைகளை விட்டுச் தாயின் வீட்டில் சென்றுள்ளார்.


இரண்டு ஆண்கள் இவரை கடத்திச் சென்று பிள்ளைகளின் தாயை மறைத்து வைத்துள்ளதாகவும் இவர்களை பிடித்து சட்ட நடவடிக்கை  எடுக்குமாறும் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


தாயை இழந்து பரிதவிக்கும் 4 பிள்ளைகளின் நலன் கருதி இவரை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது கீழ் உள்ள இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளவும்.


பொத்துவில் பொலிஸ் -0632248022

அவரின் வீடு - 0752514912


(தகவல் -சியாத், பொத்துவில்)

2025.08.31