மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை அகழ்வது தொடர்பான விசாரணையை நாளைய தினமும் மேற்கொள்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த மனிதப் புதைகுழியை அகழ்வதற்கான விசாரணைகளை மேற்கொள்ள நீதவான் ஏ.ரஞ்சித்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், மனிதப் புதைகுழி எனச் சந்தேகிக்கப்படும் இடத்தைப் பார்வையிட்ட நீதவான், குறித்த பகுதியைக் குற்றப் பிரதேசமாகவும் அடையாளப்படுத்தியுள்ளார்.
அதேநேரம், குறித்த இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பான வழக்கை நாளைய தினமும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் 1990 ஆம் ஆண்டு காத்தான்குடிக்கு பயணித்த பொதுமக்கள் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகத் தெரிவித்து, பொதுமகன் ஒருவரால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment