கொழும்பு - பதுளை பிரதான வீதியில் விபத்து; பலர் வைத்தியசாலையில்



 


கொழும்பு - பதுளை பிரதான வீதியில் இன்று (11) மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பெல்மடுல்லவிலிருந்து பலாங்கொடை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தொன்றும் பலாங்கொடையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான மற்றுமொரு பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.