அமெரிக்காவில் வாழும் இலங்கை சமூகத்தினருடன் ஜனாதிபதி



 


அமெரிக்காவில் வாழும் இலங்கை சமூகத்தினரை நியூயோக்கிலுள்ள ஸ்டெடன் ஐலண்ட் கலைக் கூடத்தில்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக சந்தித்துக் கலந்துரையாடினார்.


தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட அமெரிக்காவிலுள்ள ஏராளமான இலங்கை சமூகத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதிக்கி உற்சாகமான வரவேற்பளித்ததோடு பாராட்டுக்களையும் தெரிவித்தனர் 


நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மட்டுமே தான் கட்டுப்பட்டவன் என்பதை இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி கடந்த ஆண்டில் இலங்கையில் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்பட்டுள்ள தீர்க்கமான திருப்பத்தை விளக்கிக்கூறினார்.எந்தவொரு தடைகளுக்கு மத்தியிலும் முன்னெடுத்த பணிகளிலிருந்து பின்வாங்க மாட்டேன் எனவும் இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி அரசாங்கத்தின் தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு பங்களிக்குமாறும் இவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.