ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற கழிப்பறைக்குள் தற்போதுஒருவர் தூக்கிட்டு தற்கொலை. நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இச்சம்பவம் இடம்பெற்றது. கைதிகளை தடுத்துவைக்கும் கூண்டிலிலுள்ள மலசல கூடத்திலேயே இத்தற்கொலை இடம் பெற்றது.
இன்று காலை 11.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் வாப்புக்குட்டி நௌபர் என்பதாகத் தெரியவருகின்றது.
போதைப் பொருளடன் தொடர்புடைய குற்றத்திற்காக,விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர், மட்டக்களப்பு சிறையிலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்,ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றுக்கு, அழைத்து வரப்பட்டிருந்தார்.
இவரது வழக்கு பதில் நீதிபதி தியாகேஸ்வரன் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது அதில் ஆஜரானவருக்கு மீண்டும் விளக்கமறியலில் வைப்பதற்கான கட்டளை வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்பு அவர் கைதிகளின் கூண்டிலுள்ள மலசலகூடத்தில் தற்னொலை செய்துள்ளதானத் தெரியவருகின்றது.


Post a Comment
Post a Comment