கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரம்சீன் பக்கீர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் வருடாந்த இடமாற்றத்திற்கமைய கம்பஹா மாவட்டத்தின் பூகொட பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பதிகாரியாக இடமாற்றம் பெற்று சென்றதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இன்று(29) புதிய பொறுப்பதிகாரியாக கேகாலை மாவட்டம் மாவனெல்லை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் லசந்த களுவாராய்ச்சி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக கடமையேற்றுக்கொண்டார்.
பார்வையிட்ட புதிய பொறுப்பதிகாரியை கல்முனை தலைமையக பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ .எம் ஜிப்ரி(எல்.எல்.பி) உள்ளிட்ட பொலிஸ் ஆலோசனை குழு உறுப்பினர்கள் வரவேற்றனர்.


Post a Comment
Post a Comment