கர்ப்பிணி தாய்மார்களுக்கு சத்துணவு பொதிகள் வழங்கிவைப்பு



 


பிரண்டினா நிறுவனத்தின் அனுசரனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு  சத்துணவு பொதிகள்  வழங்கிவைப்பு.


அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேசத்தில் இயங்கிவரும்  பிரண்டிணா நிறுவனத்தின்    அனுசரனையில் அவர்களின் வாடியாளர்களில் காணப்படும் கர்ப்பிணி தாய்மார்களுக்ளுக்கு பிரசவ காலத்தில்  ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கும் பொருட்டு  சத்துணவு பொதிகள்  வழங்கும் நிகழ்வு திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தில் இடம்பெற்றது.


 பிரண்டினா திருக்கோவில் கிளையின் முகாமையாளர் திரு கோபிகரன் தலைமையில் இடம்பெற்றதுடன் 

 கிளையின் கடன் வழங்கும்  அதிகாரிகளான திரு.சங்கீத்,விதுஷன் மற்றும் லதுராஜ் மற்றும் உமாசந்திரன் ஆகியோரும்   திருக்கோவில் சுகாதார வைத்திய பணிமனையின்  உத்தியோத்தர்கள் மற்றும் காவல் துறை உத்தியோகத்தர்  நலன் விரும்பிகள்உள்ளிட்டோர்  கலந்து கொண்டு குறித்த பொருட்களை  கையளித்தனர். பிரண்டினா நிறுவனத்தினால் கடந்த காலங்களில்  வாழ்வாதா உதவி திட்டங்களூம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.