(எம்.என்.எம்.அப்ராஸ் )
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் எம்.எம்.எம்.ஆகில் மிகா எனும் மாணவன் 16 வயது ஆண்களுக்கான 100m தடைதாண்டல் ஓட்ட நிகழ்ச்சியை 14.15 செக்கனில் ஓடி முடித்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும் 300m தடைதாண்டல் ஓட்ட நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்று பாடசாலைக்கும் கல்முனை கல்வி வலயத்திற்கும் பெறுமை சேர்த்துள்ளதோடு தேசியமட்ட போட்டிக்கும் தெரிவாகியுள்ளார்.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் கடந்த 03.09.2025- 07.09.2025 திகதி வரை நடைபெற்ற போட்டியில்இச் சாதனையை எம்.எம்.எம்.ஆகில் மிகா எனும் மாணவன் புரிந்துள்ளார். இம் மாணவன் கடந்த வருடம்(2024) நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் 100m தடைதாண்டல் ஓட்டத்தினை 14.78 செக்கனில் ஓடி புதிய போட்டி சாதனையை நிலைநாட்டி கிழக்கு மாகாணத்தின் 16 வயதுப் பிரிவின் சிறந்த விளையாட்டு வீரராக ( Best athlete - 2024) தெரிவு செய்யப்பட்டு விருது பெற்றிருந்தார். இவ்வருடம்(2025) அவருடைய முன்னைய சாதனையை அவரே முறியடித்து 14.15 செக்கனில் ஓடி புதிய போட்டி சாதனையையும் பதிவு செய்துள்ளதோடு கடந்த மூன்று (2023, 2024, 2025) வருடங்களாக தடைதாண்டல் ஓட்டத்தில் மாகாண மட்டத்தில் தங்கப் பதக்கத்தை பெற்று முதலிடத்தை தக்கவைத்துள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இப் போட்டியில் பங்குபற்றிய, வெற்றியீட்டிய ஏனைய மாணவர்களுக்கும் இம் மாணவனுக்கும் பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர்களான ஏ.ஜே.எம்.சஸான்,ஏ.சி.எம்.அஸ்லம் , விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களான ஏ. ஜே.எம்.சாபித்,எம்.ஜே.எம். முபீத் மற்றும் ஜே.எம். இன்சாப் ஆகியோர்களுக்கும் வெற்றிக்காக உறுதுனையாய் இருந்து மாணவர்களை ஊக்கப்படுத்திய பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக், பிரதி அதிபர்,உதவி அதிபர்கள்,பகுதி தலைவர், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பெற்றோர் ஆகியோருக்கும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.


Post a Comment
Post a Comment