தொழிலதிபர் 2025 உயர் விருது




 பாறுக் ஷிஹான்


சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில்  அல்மாஸ் ஜுவல்லரி நகையகம் மற்றும் அல்மாஸ் பெஷன் ஆடையகம் போன்றவற்றின் உரிமையாளர் இளம் தொழில் அதிபரும், பிரபல சமூக சேவகருமான  அஹமது அனிபா அர்ஷாட் ( Ahamathu Aneefa ARSAD )  மக்களின் நம்பிக்கையினை  வென்ற இவருக்கு international World Record of Asia Award அமைப்பினால்  தொழிலதிபர் -2025 எனும் உயர் விருதினை   கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற விருது  வழங்கும் விழாவில்   கௌரவிக்கப்பட்டார்.


இவர் சமூக சேவை செயற்பாடுகளில்   அதீத அக்கறையுடன் பணியாற்றி வருகின்றவர் . மின்மினி மீட்சி சமூக, பொருளாதார, கல்வி,அபிவிருத்திக்கான அரச சார்பற்ற  அமைப்பின் ஆலோசகராகவும், சம்மாந்துறை நகையக வர்த்தக சங்கத்தின் அங்கத்தவராகவும், கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி(தேசிய பாடசாலை)யின் அபிவிருத்தி நிறைவேற்று குழுவின்  உயர் சபை பிரதிநிதியாகவும் செயற்பட்டு வருகிறார்.

 இவர் இலங்கை- இந்திய நற்புறவு ஒன்றியத்தினுடாக TOP-100 AWARD -2025 சிறந்த தொழிலதிபருக்கான பதக்கம் அணிவித்து, பொன்னாடை போர்த்தி ,விருதும், விருதுப் பத்திரமும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு: தமிழ் Letter ஊடக அமைப்பினால் "நம்பிக்கைக்குரிய இளம் தொழில் முயற்சியாளருக்கான விருதும், பொன்னாடை, பதக்கம்,விருது, சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டவராவார்.