l
தெற்கு கடலில் மிதந்த நிலையில் நேற்று (14) கண்டறியப்பட்ட போதைப்பொருளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சுமார் 50 பொதிகள் தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
நேற்று (14) மாலை இந்த பொதிகள் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 பொதிகளில் ஹெரோயின் இருப்பதாகவும், மற்ற 48 பொதிகளிலும் ஐஸ் ரக போதைப்பொருள் இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுட்ட நிலையில் குறித்த 51 பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில் 670 கிலோகிராம் ஐஸ் மற்றும் 156 கிலோகிராம் ஹெரோயின் இருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.
கூடுதலாக, பொதிகளில் கிட்டத்தட்ட 12 கிலோகிராம் ஹஷிஷ் போதைப் பொருள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment