வி.சுகிர்தகுமார்
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் 4 வீடுகள் இன்று கையளிக்கப்பட்டன.
அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் ஆலோசனைக்கு அமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.இம்தியாஸ் மற்றும் இணைப்பு செயலாளர் எஸ்.எம்.ஆரிப் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஆர்.ரதீசன் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர் ரதீஸ் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம உத்தியோகத்தர்கள் கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 10 இலட்சம் ஒதுக்கீடு மற்றும் மக்கள் பங்களிப்புடன் நிர்மாணக்கப்பட்ட பெறுதிமிக்க 4 வீடுகள் இதன்போது திறந்து வைக்கப்பட்டன.
திறப்பு விழாவின் பின்னர் கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் குறித்த வீடமைப்பிற்காக உதவியினை புரிந்த பாராளுமன்ற உறுப்பினருக்கும் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்ததுடன் இதுபோன்ற வீடற்ற மக்கள் இன்னும் வாழும் பிரதேச செயலாளர் பிரிவில் எதிர்காலத்திலும் வீட்டுத்திட்டங்களை வழங்கி ஏழை மக்களுக்கு உதவி புரிய வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இதேநேரம் இங்கு கருத்து வெளியிட்ட பல்கலைக்கழக மாணவி ஒருவர் இவ்வீட்டுத்திட்டத்தினை வழங்கிய அரசுக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்தார்.
இதன்போது வீட்டினை பெற்றுக்கொண்ட பயனாளி ஒருவரால் பிரதேச செயலாளருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை சிறப்பு நிகழ்வாக அமைந்தது.


Post a Comment
Post a Comment