அக்கரைப்பற்று நோக்கி வந்த CTB பஸ் விபத்து



 


#பஸ் #லொறி #விபத்துக்குள்ளாகி #மூவர் #மரணம் 


நாரம்மல  குருநாகல் வீதியில் விமான நிலையம் இருந்து அக்கறைபற்று நோக்கி வந்த இலங்கை போக்குவரத்து சபை (CTB)  பஸ் லொறியும்  விபத்துக்கள்ளாகி உள்ளது


இன்று (05) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது 


குருநாகலில் இருந்து நாரம்மல நோக்கி பயணித்த லொறியின் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கத்திற்கு சென்று கட்டுநாயக்கவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது இதனால் மூவர் உயிரிழந்துள்ளதாக அறியமுடிகின்றது 


மேலும் காயமடைந்தவர்கள் நாரம்மல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


உயிரிழந்தவர்கள் பொலன்னறுவையைச் சேர்ந்த, 41, 80 மற்றும் 82 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.