வவுணதீவு வயல் பிரதேசத்தில் உழவு இயந்திரம் தடம்புரண்டு சாரதி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு--
(கனகராசா சரவணன்)
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை வயல் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று தடம்புரண்டு நிலையில் அதன் சாரதி உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று செவ்வாய்க்கிழமை (21) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்
பாவக்கொடிச்சேனையைச் சேர்ந்த 51 வயதுடைய முத்துப்பிள்ளை கருணாநிதி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சம்பவ தினமான நேற்று வீட்டில் இருந்து பழங்குடியிருப்பு மடு பிரதேசத்திலுள்ள வயல் ஒன்றை உழுது பயன்படுத்துவதற்காக உழவு இயந்திரத்துடன் சென்றவர் இரவாகியும்; வீடு திரும்பாத நிலையில் அவரை தேடி இன்று செவ்வாய்க்கிழமை காலையில் சென்ற போது உழவு இயந்திரம் தடம் புரண்ட நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பதை கண்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
;


Post a Comment
Post a Comment