நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் பிரதேச சபையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மர்ஹூம் அமீர் மேர்சா பொது நூலகத்தின் 2025 அக்டோபர் வாசிப்பு மாத நிகழ்வுகளில் ஒன்றாக நிந்தவூர் கமு/கமு/ அல்- பதூரியா வித்தியாலயத்தின் மாணவர்களை பொது நூலகத்தோடு தொடர்புகளை ஏற்படுத்தும் முகமாக அமீர் மேர்சா பொது நூலகத்திற்கான இலவச அங்கத்துவ அட்டைகள் நிந்தவூர் பிரதேச சபையினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் மட்டுமல்லாமல் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களையும் கௌரவிக்க வேண்டும் என சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் ஜேபி அவர்களின் எண்ணக்கருவில் அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் அணிவித்தும் கௌரவிக்கப்பட்டது. மேலும் இம்மாணவர்களை நெறிப்படுத்திய ஆசிரியையான எம்.எஸ்.முகைதீன் அவர்களும் இதன் போது கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.அஸ்பர் ஜேபி, பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எம்.எம். அன்சார், எம்.சம்சுன் அலி, எம்.ஐ.எப். றிஹானா, சபை செயலாளர் எஸ்.ஷிஹாபுத்தீன், நூலகர் திருமதி ஏ.எல்.நஸீரா மற்றும் பதூரியா பாடசாலையின் அதிபர் ஏ.ஜெஸீர் அலி, பாடசாலையின் ஆசிரியர்கள், நூலக அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்


Post a Comment
Post a Comment