சூரசம்ஹாரம்




 (வி.ரி.சகாதேவராஜா)

 வரலாற்று பிரசித்தி பெற்ற 
2000ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும்
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த சூரசம்ஹாரம்
நேற்று(27)  திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

ஆலயபிரதமகுரு விபுலமணி
சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களின் வழிகாட்டலில் ஆலயபரிபாலனசபைத்
தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் நெறிப்படுத்தலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
புடைசூழ சூரன்போர் இடம்பெற்றது.

 வழமைக்கு மாறாக பக்தஅடியார்கள் பெருமளவில்
சமுகமளித்திருந்ததைக் காணக்கூடியதாயிருந்தது