தெய்வாதீனமாக உயிர் தப்பி கரை சேர்ந்த வாழைச்சேனை மீனவர்கள்



 


எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஆழ்கடலுக்கு தொழிலுக்காக சென்ற படகு பாரிய அழையின் காரணமாக நீரில் மூழ்கிய போது அதில் பயணித்த மீனவர்கள் மூன்று பேரும் தெய்வாதீனமாக உயிர் தப்பி இன்று (12.10.2025) கரைக்கு வந்து சேர்ந்ததாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


வாழைச்சேனையிலிருந்து கடந்த 04.10.2025ம் திகதி  தொழில் நிமித்தம் எம்.எச்.முஹம்மட் அலீம் என்பவருக்குச் சொந்தமான ஆழ்கடல் படகில் மூன்று பேர் தொழிலுக்காக ஆழ்கடலுக்குச்சென்று மீண்டும் 10.10.2025ம் திகதி கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த வேளை கரைக்கு 113 கடல் மைல் தூரத்தில் அதிகாலை மூன்று மணியளவில் ஏற்பட்ட பாரிய அலையினால் படகில் நீர் புகுந்ததினால் படகின் பின்புறம் நீரில் ழுழ்கி கொண்டிருந்த வேளை அருகில் பயணித்த படகின் உதவியுடன் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை கரைக்கு வந்து சேர்ந்ததாக படகில் பயணித்த மீனவர்கள் தெரிவித்தனர்.


படகில் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவு பிறைந்துரைச்சேனையைச்சேர்ந்த ஹலால்தீன் (வயது – 42), பாலைநகரைச்சேர்ந்த ஜே.எம்.நவ்சாத், தியாவட்டவானைச்சேர்ந்த ஆர்.எம்.பைஸர் ஆகிய மூவருமே உயிர் தப்பி கரைக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக படகு உரிமையாளரால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எமது  மாஞ்சோலை லயன்ஸ் இலங்கை வாட்ஸாப்ப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்