பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மர்ஹூம் அபூ சாலிஹின் அவர்களின் அன்பு துணைவி காலமான செய்தி எமக்கு மிகவும் துயரத்தை அளிக்கின்றது என யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் றிபைன் பாத்திமா றிஸ்லா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மர்ஹூம் அபூ சாலிஹின் அவர்களின் அன்பு துணைவியாரும் சமூகத்தில் மதிப்புமிக்க மூத்த குடிமகனாக விளங்கிய ஹாஜியானி நபீஸா உம்மா அவர்கள் தனது 103ஆவது வயதில் சுகயீனமுற்றிருந்த நிலையில் அண்மை யில் தனது இல்லத் தில் காலமானார் என்ற செய்தி எமக்கு மிகவும் துயரத்தை அளிக்கின்றதுஅவர் நீண்ட ஆயுளில் மதிப்பும் மரியாதையும் நிறைந்து வாழ்க்கையை வாழ்ந்ததுடன் சமூக நலனில் ஆர்வம் உள்ளவராகவும் அனைவராலும் மதிக்கப்படுவதாகவும் இருந்தார்.
அத்துடன் யாழ் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்கென ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் பல முயற்சிகளை மேற்கொண்டு மக்களின் மனதில் நீங்காத இடத்தினைப் பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை யாழ் முஸ்லீம் மக்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்வதுடன் இறுதி வரை தொழுகை உட்பட மார்க்கக் கடமை களில் ஈடுபாடு காட்டிய அன்னாருக்கு அல்லாஹ் த ஆலா ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை அருளி அவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இந்த துயர வேளையில் மன அமைதி பொறுமை அருள்வாளாக என்று பிராத்திக்கின்றேன் இவரின் நினைவு என்றும் எங்கள் மனதில் நிலைத்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்


Post a Comment
Post a Comment