எம்.ஏ. தாஜஹான்
அக்கரைப்பற்று வலய மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு இன்று அக்கரைப்பற்று ஆயிஷா மகளிர் கல்லூரியில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.
கொழும்பு பாராளுமன்ற அமர்வை நேரடியாக பார்த்து சுவைத்ததைப் போன்று இந்நிகழ்வு காணப்பட்டது. நிகழ்வை துல்லியமான முறையில் ஆசிரிய ஆலோசகர்களான எம்.ஏ.றபீக் (ISA), ரியாஸ் முகம்மட் (ISA) ஆகியோர்கள் நெறிப்படுத்தியிருந்தார்கள்.
நேரம் தவறாத பண்புடைய எமது வலயக் கல்விப் பணிப்பாளர் றஹ்மத்துல்லா சேர் ஒரு நிமிடமும் பிந்தி வராமல் உரிய நேரத்திற்கு பிரசன்னமாயிருந்தார். சரியாக மு.ப. 9.00 மணியளவில் அக்கரைப்பற்று வலய பாராளுமன்ற செயலாளர் நாயகம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம் றஹ்மத்துல்லாஹ் சேர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எச். பௌஸ் சேர், எம்.எம்.சித்தி பாத்திமா மெடம், ஆசிரிய வள முகாமையாளர் எம்.ஏ. தாஜஹான் சேர், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஹனிபா இஸ்மாயில் சேர், ஆசிரிய ஆலோசகர்களான எம்.ஏ.ஏ. றபீக் சேர்,
ஏ. றியாஸ் முகம்மட் சேர் மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் புடை சூழ பேண்ட் வாத்தியம் வானைப் பிளக்க மாலை சூடி அதிதிகளோடு மன்றம் கலைகட்டியது.
மெல்லிய ராகத்தோடு குர்ஆன் வசனம் பாராயனம் செய்யப்பட்டது. தேசிய கொடியினை வலயக் கல்விப் பணிப்பாளர் றஹ்மத்துல்லா சேர் ஏற்றிவைக்க, வலயக் கொடியினை சித்தி பாத்திமா ஏற்றி வைக்க மங்களமான நாளில் சிங்களத்தில் தேசிய கீதத்தை ஆயிஷா பாலிஹா மாணவர்கள் இசைத்தார்கள்.
படைச் சேவிதர் செங்கோல் ஏந்தி சபாநாயகர் மற்றும் செயலாளர் நாயகம், பிரதிச் செயலாளர் நாயகம் உள்ளிட்ட அதிதிகளை சம்பிரதாயபூர்வமான முறையில் நடை பவணியில் அழைத்து வர எல்லோரும் எழுந்து நின்று வரவேற்று மன்றின் மகிமையினை குன்றில் ஏற்றினார்கள்.
பத்து அமைச்சர்கள், பத்து பிரதியமைச்சர்கள், சபாநாயகர், பிரதி சபா நாயகர், பிரதமர், பிரதி குழுக்களின் தலைவர், சபை முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர்கள் என தலைமையினை சுமந்த மாணவர்களின் திறமையான பேச்சுகளும், மும்மொழிகளின் வீச்சுகளும், நல்ல திட்டங்களும், மன்றில் இடம் பெற்ற பொழுது எதிர் கால தென்கிழக்கின் அரசியல் எழுச்சிக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர் றஹ்மத்துல்லா சேர் வித்திட்டுள்ளார் எனும் நம்பிக்கை நாமத்தோடு இன்றைய அமர்வு முடிவடைந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்
எம்.ஏ. தாஜஹான்.


Post a Comment
Post a Comment