நூருல் ஹுதா உம
கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களால் இன்று (01) " உலகை வழி நடத்த அன்பால் போசியுங்கள்" எனும் தொனிப்பொருளினாலான சிறுவர் தின ஊர்வலம் பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் தலைமையில் இடம்பெற்றது.
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் பிரதான வீதியின் ஊடாக சென்று கல்முனை சந்தாங்கணி விளையாட்டு மைதான வீதி வழியாக பாடசாலையை வந்தடைந்தது .
இதன்போது சிறுவர் உரிமைகள், சிறுவர்கள் பாதுகாப்பு மற்றும் கல்வி போன்ற பல தொனிப் பொருள்களை உள்ளடக்கிய பதாகைகளும், வாசகங்களும் மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டதோடு சமூகத்திற்கு விழிப்பணர்வை ஏற்படுத்தும் வகையில் இவ்வூர்வலம் அமைந்திருந்தது.
மேலும் ஊர்வலத்தில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு கல்முனை வர்த்தக சங்கத்தினரால் குளிர்பானங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் இணைந்து பங்கு பற்றினர்


Post a Comment
Post a Comment