( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை பிராந்தியத்தில் இன்று (01) புதன்கிழமை அதிகாலை திடீர் காலநிலை மாற்றத்தை அவதானிக்க முடிந்தது.
அதிகாலையில் பாரிய பனிமூட்டம் நிலவியது.
குறிப்பாக வீதிகளில் பனிமூட்டம் படர்ந்து காணப்பட்டது.
வீதியால் பயணிப்போருக்கு எதிரே செல்கின்ற வாகனத்தை அவதானிக்க முடியாத அளவுக்கு பனிமூட்டம் வீதியை மறைத்து இருந்தது.
இவ்வாறான நிலைமைகளில் வீதியால் பயணிப்போர் வாகனச் செலுத்திவோர் மிகுந்த அவதானத்துடன் மெதுவாக பயணித்தனர்.


Post a Comment
Post a Comment