நூருல் ஹுதா உமர்
இயற்கை நேயமிக்க சூழலை உருவாக்கும் இளம் சமுதாயத்தை கட்டியெழுப்புவோம் வேலைத்திட்டத்தின் கீழ் "பிளாஸ்டிக் பாவனையால் வளி மாசடைதலை தடுப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் மாணர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு சம்மாந்துறை கல்வி வலய பாடசாலையான கமு/சது/அல்- அமீன் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் கே.எல். கலந்தர் லெப்பை தலைமையில் இடம்பெற்றது.
இலங்கை சுற்றுச்சூழல் அதிகார சபையினுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் பை.பி. ஜெமீனாவின் ஒருங்கிணைப்பில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில், இறக்காமம் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார் விசேட உரை நிகழ்த்தியதோடு உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப் அவர்களினால் மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் அமர்வு இடம்பெற்றது. நிகழ்வின் பிரதான வளவாளராக அம்பாறை மாவட்ட சுற்றுச்சூழல் அதிகார சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என். ராஜன்
கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தி வைத்தார்.
இறக்காமம் பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.எப்.சப்றானா, பிரிவிற்கு பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பி. பௌமியா ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment